Tuesday, June 26, 2012

ஹிக்ஸ் போசொன் (கடவுளின் துகள்) கண்டுபிடிப்பு அறுதியில்லை.


 பெரும் பரபரப்புடன் இயற்பியல் அல்லது பெளதீகவியல் உலகம் எதிர்பார்த்த CERN இன் LHC பரிசோதனைக் கண்டுபிடிப்புக்கள் ஹிக்ஸ் போசொன் (இந்தப் பிரபஞ்சத்தில் திடப்பொருட்கள் தோன்ற காரணமான அடிப்படை கூறு என்று நம்பப்படும்.. கடவுளின் துகள் என்று சொல்லப்படும் துகள்) பற்றி அறுதி இட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிவிட்டது. இருந்தாலும்.. ஹிக்ஸ் போசொன் இருப்பதற்கான வாய்ப்பை அது உறுதி செய்ய முயன்றிருக்கிறது.

Atlas மற்றும் CMS ஆகிய இரண்டு மையங்களில் இருந்து சுயாதீன செயற்பாடுகளைக் கொண்ட இரண்டு, வெவ்வேறான விஞ்ஞானிகளைக் கொண்ட குழுமங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்துள்ளன.

அப்படி ஹிக்ஸ் போசொன் இருக்குமானால் அது 124-125 gigaelectronvolts (GeV) எடை கொண்டதாக இருக்கும் என்றும் இந்த எடை அளவு புரோத்தனின் எடையை விட 130 மடங்கு அதிகம் என்றும் இந்த  ஆய்வில் ஈடுபட்டிருந்த வெவ்வேறான இரண்டு விஞ்ஞானிகள் குழுமங்களுமே.. கிட்டத்தட்ட ஒரே வகையாக கணிப்பிட்டுள்ளன. இதுதான் ஹிக்ஸ் போசொனின் இருப்புக் குறித்தான இந்த ஆய்வில்.. விஞ்ஞானிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ள நிகழ்வாகும். 

ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பாக அறிவிக்க 5  சிக்மா நிச்சயத்தன்மை (certainty) அவசியம். ஆனால் இந்த ஆய்வில் ஹிக்ஸ் போசொன் இருப்பிற்கான ஆதாரங்கள் வெறும் 2 சிக்மா certainty ஐ மட்டுமே கொண்டுள்ளதால்.. இதை ஒரு கண்டுபிடிப்பாக விஞ்ஞானிகள் கருதாமல்.. ஹிக்ஸ் போசொன் இருப்பதற்கான சாத்தியப் பாடு குறித்து  பேச மட்டுமே பாவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹிக்ஸ் போசொன் கண்டுபிடிப்பு அறுதித் தன்மையை எட்டாததால் எதிர்காலத்தில் ஹிக்ஸ் போசொனை வேறு வழிகளில் கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொள்ளப் பரிந்துரைத்துள்ளதுடன் ஹிக்ஸ் போசொன் விரைந்து அழிவடைகிறது அல்லது வேறு திடமான துணிக்கையாக மாறிவிடுகிறது என்றும் எதிர்வுகூற விளைந்துள்ளனர்.

எதுஎப்படியாக இருந்தாலும் ஹிக்ஸ் போசொனுக்கான பல பில்லியன் டொலர் செலவழிப்புத் தேடல் அதன் இருப்பை அறியும் வரை அல்லது நிரந்தரமாக நிராகரிக்கும் வரை ஓயமாட்டாது என்பதாகவே விஞ்ஞானிகளின் 13-11-2011 அறிவிப்பு தெரிவிக்கிறது.

மேலும்.. இந்த நிச்சயமற்ற நிலை.. ஹிக்ஸ் போசொன் கடந்தும் துணிக்கைப் பெளதீகவியல் பற்றி காத்திரமாக சிந்திக்க தூண்டியுள்ளது.

No comments: