Pages

Monday, September 3, 2012

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது 'கியூரியாஸிட்டி'

செவ்வாய் கிரகத்தில் கியூரியாஸிட்டி
அமெரிக்காவின் ஆளில்லா வாகனம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.
அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் ஏதாவது தெரிகிறதா என்பதை ஆராயும் நோக்கிலேயே இந்த வாகனம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை அமெரிக்க தேசிய வின்வெளி அமைப்பான நாசா கொண்டாடி வருகிறது. ஒன்பது மாதப் பயணத்துக்கு பிறகு, 'கியூரியஸிட்டி' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோட்டிக் வாகனம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளது.

பெரும் பள்ளம் ஒன்றில் இந்த வாகனம் தரையிறங்க ஏழு நிமிடங்கள் ஆனது.
ஆயிரம் கிலோ அளவு எடை கொண்ட அந்த வாகனத்தை கலிஃபோர்னியாவில் இருந்து இயக்கும் விஞ்ஞானிகள், ஒரு பாராச்சூட் மற்றும் இதர ராக்கெட் வசதிகளுடன் மெதுவாக தரையிறக்கினர்.
தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே அந்த வாகனம், செவ்வாய் கிரகத்தின் படங்களை அனுப்ப ஆரம்பித்துவிட்டது.
மகிழ்ச்சியில் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகம் குறித்து ஆராய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இதுவே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டது என்று, இந்தத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்த ரோபோட்டிக் வாகனத்தில், கதிரியக்கத்தை கண்டறியும் கருவி, இயந்திரக் கை மற்றும் லேசரின் உதவியுடன் துளையிடும் கருவி உட்பட பல அதிநிவீன தொழிநுட்ப இயந்திரங்கள் உள்ளன.

No comments:

Post a Comment