மரபணு மாற்று தொழில்நுட்பம் என்பது 21 ம் நூற்றாண்டில் சிறந்த கண்டுபடிப்புகளில் ஒன்று என்றால் மிகையாகாது. இதன் மூலம்.. சிறிய பக்ரீயாக்களில் இருந்து பங்கசுக்களில் இருந்து எமக்குத் தேவையான புரதங்கள்.. கொழுப்பமிலங்கள்.. மருந்துகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடிகிறது.
மேலும்.. சூழலுக்கு உகந்த உக்கக் கூடிய இறப்பர் போன்ற சேதனப் பொருட்களை உருவாக்க முடிகிறது. நாம் உண்ணும் அரிசியில் கூட தேவையான ஊட்டச் சத்துக்களை புகுத்திவிட முடியும். அந்தளவுக்கு இந்தத் தொழில்நுட்பம் முன்னேறி வருகிறது.
இது ஏழைகளுக்கும்.. நடுத்தர வருவாய் உள்ள மக்களுக்கும் தேவையான போசாக்குள்ள உணவுகளை வழங்க ஒரு வழிமுறையும் கூட..!
மேலும்.. தாவரக் கழிவுகளில் இருந்து காபன் சமநிலை (Carbon neutral) எரிபொருட்களை விரைந்து உருவாக்கக் கூடிய உயிரினங்களை உருவாக்க முடிகிறது.
அமெரிக்க ஆய்வாளர்களால் சிலந்தியின் மரபணு செலுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள சிலந்தி ஆடு.
அந்த வகையில் இப்போ அமெரிக்காவில் ஆட்டில் சிலந்தியின் மரபணுவைச் செலுத்தி.. அதன் பாலில் சிலந்தியின் வலையில் காணப்படும் புரதத்திற்கு ஒத்த.. புரதத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. நாளை நமக்குத் தேவையான.. மருந்துகளைக் கூட.. ஆட்டுப் பாலில் பெற முடியும் என்றால் நாம் அதிசயகத் தேவையில்லை.. மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் அதற்கு உதவும்.
சரி இதனால் ஏதேனும் கேடு... இல்லாமலா இருக்கும். இந்த புகுத்தப்படும் மரபணுக்கள்.. குறிப்பாக தாவரங்களில் எதிர்பாராத விளைவுகளை உண்டு பண்ணி இருக்கின்றன. குறிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்கள் மற்றைய தாவரங்களை விட அதிக போட்டியை சமாளிக்கின்றன. மண்ணில் இருந்து அதிக ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. இதனால் மண்ணின் வளம் மற்றைய தாவரங்களை சரியாக சென்றடையாது.. அவை இறக்கின்றன... அல்லது குறைந்த விளைச்சலை தருக்கின்றன. இது உலகில் நிலவும் பல்லினத் தன்மைக்கும்.. ஒரு சவால்..!
மரபணு மாற்றங்கள்.. சில சந்தர்ப்பங்களில்.. இயற்கையின் சூழலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலையை அந்த உயிரியில் நேரச் செய்யின் அவை விரைந்து இறந்தும் விடவல்லன. மரபணு மாற்றங்கள் உருவாக்கும் சில விகாரங்கள்.. எதிர்பாராத விளைவுகளை உயிரிகளில் உருவாக்கவும் கூடும். இப்படியான சில அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மரபணு மாற்று தொழில்நுட்பம் 21ம் நூற்றாண்டில்.. மனிதர்களின் அதிகரித்த தேவைகளுக்கு ஒரு வடிகால் அமைக்க அவசியம் என்ற கருத்து விஞ்ஞானிகள் மட்டத்தில் உறுதியாகவே இருக்கிறது.

No comments:
Post a Comment