Saturday, June 23, 2012

பூமியை வெப்பப்படுத்திய டைனாசார்கள்..!

Illustration of Apatosaurus

பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில்  sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன.

இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. 


Brachiosaurus illustration

அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மிதேன் வாயு சும்மா வாயு அல்ல. அது ஒரு பச்சைவீட்டு வாயு ஆகும். அதாவது அது சூரியனில் இருந்து வரும் செந்நியக் கீழ் கதிர்ப்புக்களை (IR) உறிஞ்சி.. பூமியின் வளிமண்டலத்தில் மீளக் காழல் செய்யும். இதனால் பூமி வெப்பமடையும்..!

இதன்படி Mesozoic யுகக் காலத்தில் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 10 பாகை செல்சியஸால் அதிகரித்திருப்பதாக பிரித்தானிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Graphic showing animals and methane emissions 

இன்றைய பூமி வெப்ப முறுதலில் பண்ணை விலங்குகளான மந்தைகள் (மாடு.. ஆடு.. பன்றி.. போன்றவை)  வெளியிடும் மிதேன் வாயுவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் ஏலவே நிறுவிக் காட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்..!

உலகில் மனிதர்களால் வளர்க்கப்படும்.. மற்றும் இதர மந்தைகள் ஆண்டுக்கு 50 தொட்டக்கம் 100 மில்லியன் தொன் மிதேன் வாயுவை வளிமண்டலத்துள் சேர்க்கின்றன.

மனிதர்களும் சும்மா இல்லை.. அவர்களும் "காஸ்" விடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு மிதேனை செயற்கை வழிகளுக்கு அப்பால் இயற்கை வழியில் வளிமண்டலத்துக்குள் சேர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

No comments: