
மார்ச் 2012 இல் நடத்தப்பட்ட புதிய பரிசோதனையின் பிரகாரம்.. நியுற்றினோவும் ஒளியின் வேகத்தில் தானாம் செல்கிறது என்று கணிப்புக்களூடு புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள பின்னணியில் இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நியுற்றினோ ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் என்ற அறிவிப்பு புகழ் பூத்த இயற்பியல் விஞ்ஞானியான Einstein கண்டுபிடிப்புக்களையும் கொள்கைகளையும் பொய்யாக்கும் நிலைக்கு கொண்டு சென்ற நிலையில்.. இன்று நியுற்றினோக்கள் ஒளியின் வேகத்தில் தான் செல்கின்றன என்ற புதிய அறிவுக்கு அமைய இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது உண்மையில்.. முன்னைய சோதனையின் பிழையான கண்டுபிடிப்பின் விளைவா அல்லது.. Einstein இன் புகழை காப்பாற்றும் நிகழ்வா..?! என்ற சந்தேகமும் பலர் உள்ளங்களில் எழவே செய்கிறது. எனவே விஞ்ஞானிகள் இது தொடர்பில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை உலகிற்கு அறிவிக்கும் வாய்ப்பு கூடி வரும் என்றே எண்ணுகின்றோம்.
No comments:
Post a Comment